இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை அமெரிக்காவில் நடிகர் நெப்போலியன் சந்தித்து பேசியுள்ளார்.
திடீர் சந்திப்பு
இசை சுற்றுப்பயணத்திற்காக அமெரிக்கா சென்றுள்ள ஏ.ஆர். ரஹ்மான் அங்கிருந்து பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில், நடிகர் நெப்போலியன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை அமெரிக்காவில் சந்தித்துள்ளார். இது குறித்து நடிகர் நெப்போலியன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ‘ஆஸ்கார் நாயகன் திரு ஏ.ஆர். ரஹ்மான் அவர்களை நேற்று இரவு சந்தித்ததில் மகிழ்ச்சி. மிகவும் இனிமையாக பேசினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறேன் இருப்பினும் அதே அன்பான உபசரிப்பு’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்கார் நாயகன் திரு AR Rahman அவர்களை நாங்கள் வசிக்கும் அமெரிக்காவில் Nashville ல் நேற்று இரவு (August 9th ) சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..! மிகவும் எளிமையாகவும் இனிமையாகவும் பேசினார்..! பல ஆண்டுகளுக்குப் பின்னால் சந்திக்கிறேன்..!
அதே அன்பான உபசரிப்பு…! pic.twitter.com/nX99qdWLt0— Nepoleon Duraisamy (@actornepoleon) August 10, 2022

