குப்பை தொட்டியில் துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கோயம்பேட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கை துப்பாக்கி
கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் குப்பை தொட்டி ஒன்று உள்ளது. அங்கு நேற்று அதிகாலை மெட்ரோ ரெயில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் ராணி, நாகம்மாள் ஆகிய இருவரும் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த குப்பை தொட்டியில் கை துப்பாக்கி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தேர்வுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோயம்பேடு காவல்துறையினர் அந்த துப்பாக்கியை கைப்பற்றி, ஆயுத கிடங்கிற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பரிசோதனையில், அது சினிமா படப்பிடிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் பொம்மை துப்பாக்கி என்று தெரியவந்துள்ளது.

