நிலக்கரி கொள்முதல் விவகாரத்தில் அண்ணாமலையின் குற்றச்சாட்டுகள் எதுவும் ஏற்புடையது அல்ல என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
ஆலோசனை
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். இந்நிலையில், தமிழகத்தில் கனமழைக்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு குறித்து சென்னை தமிழ்நாடு மின் உற்பத்தி கழக தலைமை அலுவலகத்தில், தலைமை பொறியாளர்கள் மற்றும் அனைத்து இயக்குனர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தினார்.
அமைச்சர் பேச்சு
நிலக்கரி கொள்முதல் தொடர்பான அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுகள் எதுவும் ஏற்புடையது அல்ல. அவர் விளம்பரத்திற்காக பேசுகிறார். சரியான ஆவணம் இருந்தால் பேசச் சொல்லுங்கள். பதில் அளிக்க தயாராக இருக்கிறோம்’ என்று செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

