44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவை தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிக்கிறோம் என தமிழக காங்கிரஸ் சட்டசபைக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
தொடக்க விழா
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இன்று மாலை இப்போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறு உள்ளது. இவ்விழாவில் பிரதமர் மோடி மற்றும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் என பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவுக்கான அழைப்பிதழ்கள் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது.

தமிழக காங்கிரஸ் புறக்கணிப்பு
இந்நிலையில், இந்த தொடக்க விழாவுக்கு பிரதமர் மோடி தலைமை ஏற்பதால் இந்த விழாவை தமிழக காங்கிரஸ் முற்றிலும் புறக்கணிக்கிறோம். சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி கொண்டு இருக்கும் நேரத்தில், பிரதமர் மோடி பங்கேற்கும் தொடக்கவிழாவில் நாங்கள் பங்கேற்பது முறையாக இருக்காது என்பதனால் இந்த முடிவை எடுத்துள்ளோம்.
பிரதமர் @narendramodi துவங்கி வைக்க இருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்வுகளை தமிழக சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம்.@sunnewstamil @News18TamilNadu @news7tamil @Kalaignarnews @ThanthiTV @MalaimurasuTv @DinakaranNews @GunasekaranMu @karthickselvaa pic.twitter.com/ULBsVLZhJw
— Selvaperunthagai K (@SPK_TNCC) July 27, 2022
அதனால் 18 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் இன்று நடைபெறவுள்ள தொடக்க விழாவில் பங்கேற்க மாட்டோம் என தமிழக காங்கிரஸ் சட்டசபைக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை ட்வீட் செய்துள்ளார். மேலும், செஸ் ஒலிம்பியாட் போட்டியை நாங்கள் புறக்கணிப்பதாக யாரும் எடுத்துக் கொள்ளவேண்டும். நாங்கள் மோடியை தான் புறக்கணிக்கிறோம் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்
இந்தியாவில் மற்ற மாநிலங்கள் எல்லாம் செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னெடுத்து நடத்த முன்வராதபோது, தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த துணிச்சலாக முன்வந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று செல்வப்பெருந்தகை கூறியிருக்கிறார்.


