கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக பள்ளி தாளாளர் உட்பட 5 பேருக்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல் விதிக்கப்பட்டுள்ளது.
சிபிசிஐடி
கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 13ம் தேதி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில், அவரது மரணத்தில் மர்மம் இருப்பது தொடர்பாக எழுந்த சந்தேகத்தில் நீதி கேட்டு போராட்டம் நடத்தப்பட்டு இறுதியில் போராட்டம் கலவரமாக முடிவுபெற்றது. நடந்த கலவரத்தில் பள்ளி சார்ந்த பொருள்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின் பெயரில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பள்ளியின் தாளாளர் உட்பட 5 நபர்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க நேற்று விழுப்புரத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறை அதிகாரிகள் மனு அளித்தனர். மனுவின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. கைது செய்யப்பட்ட 5 நபரையும் ஒரு நாள் விசாரிக்க அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

