அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதற்கான திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவற்கான செயல் திட்டத்தை முதலில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமங்களில் உள்ள பள்ளிகளில் வழங்குவதற்கான திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
அரசாணையில் கூறியிருப்பதாவது,
முதற்கட்டமாக ஆயிரத்து 545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி வேலை நாள்களிலும் காலை சிற்றுண்டி வழங்கப்படும்.
மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியில் வழங்கப்படும் உணவுகள்:
திங்கள்கிழமையில் அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா உள்பட காய்கறி சாம்பார்
செவ்வாய்கிழமையில் ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி
புதன்கிழமையில் வெண் பொங்கல், ரவா பொங்கல் உள்பட காய்கறி சாம்பார்
வியாழக்கிழமையில் அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா உள்பட காய்கறி சாம்பார்
வெள்ளிக்கிழமையில் ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி, ரவா கேசரி, சேமியா கேசரி
வாரத்தில் குறைந்தது இரண்டு நாள்கள் உள்ளூர் சிறுதானியங்களைக் கொண்டு காலை சிற்றுண்டி
இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

