திருச்சியில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பிரபல நடிகர் அஜித்குமார் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித்குமார்
திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் நடந்து வரும் ரைபிள் கிளப்பில் 47வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டி கடந்த 25ம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. தமிழ்நாடு முழுவதும் இருந்து துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற சுமார் 1,300 போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ளனர். இதில் வயதிற்கு ஏற்றார் போல 21 முதல் 45 வயது, 45 முதல் 60 வயது மற்றும் 60 வயதுக்கு மேல் உள்ள பிரிவினருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படுகிறது. பிஸ்டல் துப்பாக்கி சுடுவதற்கான போட்டியாளர்களுக்கு 28ம் தேதி வரை போட்டிகள் நடத்தப்பட்டு, இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படுகிறது. 29ம் தேதி முதல் 31ம் தேதி வரை ரைபிள் துப்பாக்கி சுடுபவர்களுக்கான போட்டிகள் நடக்கின்றன. இந்நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்கவுள்ளதாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டள்ளது.

