நாமக்கல் மாவட்டத்தில் நாளை கந்துவட்டி தொடர்பான புகார்களை கொடுக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கந்துவட்டி புகார்
நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி செய்தி வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாமக்கல் மாவட்டத்தில் கந்துவட்டி சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து புகார்கள் இருந்தால் அதனை நாளை காலை 10 மணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்களிடம் பொதுமக்கள் நேரடியாக மனு அளிக்கலாம். புகார் சம்பந்தமாக விசாரணை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

