தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் மூன்றாவது சிங்கிள் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது சிங்கிள்
தனுஷ் நடிப்பில், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் திருச்சிற்றம்பலம். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்படம் வரும் ஆகஸ்ட் 18ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையில் ஏற்கனவே வெளியான தாய் கிழவி, மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே ஆகிய இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், திருச்சிற்றம்பலம் படத்தின் மூன்றாவது பாடல் நாளை வெளியாகும் என்று நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
This one is very special ♥️♥️ sung by @anirudhofficial and written by my beloved @Lyricist_Vivek , Life of Pazham is an experience. The third single from #Thiruchitrambalam releases Tom
— Dhanush (@dhanushkraja) July 26, 2022
