கள்ளக்குறிச்சி விவகாரம் திட்டமிட்டு திசை திருப்பப்படுகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
மாணவி மரணம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகேயுள்ள கனியாமூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி கடந்த 13ம் தேதி தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாக தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவியின் உடலை வாங்க மறுத்தனர். இதன்தொடர்ச்சியாக கடந்த 17ம் தேதி கலவரம் வெடித்தது. அதனையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
திருமாவளவன் குற்றச்சாட்டு
இது தொடர்பாக பேசிய திருமாவளவன், ‘மாணவியின் மரணம் கொலையா?, தற்கொலையா? என்பதிலிருந்து பள்ளியைத் தாக்கியது யார்? கலவரம் செய்தது யார்? என்று திசை திருப்புகிறார்கள். இந்த சதி வேலைக்கு தற்போது உளவுத்துறையும் துணைபோகிறது’ என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

