செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக சென்னை வருகிறார்.
பிரதமர் மோடி
செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ம் தேதி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தொடங்கும் இந்த போட்டி அடுத்த மாதம் 10ம் தேதிவரை நடைபெறவிருக்கிறது. இதன் தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது இதில் கலந்துகொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி, சென்னை வருகிறார். வரும் 28ம் தேதி மாலை 4.45 மணிக்கு அகமதாபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு வரும் மோடி அங்கிருந்து ஐஎன்எஸ் அடையார் விமான தளம் வரை ஹெலிகாப்டர் மூலம் செல்கிறார்.
பட்டமளிப்பு விழா
அதன்பிறகு கார் மூலம் நேரு உள் விளையாட்டு அரங்கை வந்தடைவார் என்று தெரிகிறது. நிகழ்ச்சிக்கு பின்னர் தங்குவதற்காக ஆளுநர் மாளிகைக்கு செல்கிறார். இதனையடுத்து 29ம் தேதி அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெறவிருக்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள இருக்கிறார் பிரதமர் மோடி. பிறகு மீண்டும் விமானம் மூலம் அகமதாபாத் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

