புதுக்கோட்டை நகர்புற ஊரக அமைப்பு உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
லஞ்ச ஒழிப்புதுறை
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அரசு அதிகாரி தன்ராஜ் (42). இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்புற ஊரக அமைப்பு உதவி இயக்குனராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில், இன்று காலை அரியலூரில் உள்ள தன்ராஜின் வீடு, கல்யாண மண்டபம், ஓடக்கார தெருவில் உள்ள வீடு, பெரம்பலூர் மாவட்டம் பிலிமிசை கூத்தூரில் உள்ள வீடு என மொத்தம் 6 இடங்களில் 6 குழுக்களாக 40திற்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தி வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் வெளியாகியுள்ளது.

