இந்தியாவில் 5ஜி அலைக்கற்று ஏலம் ஆன்லைனில் நடைபெற்று வருகின்றது.
5ஜி ஏலம்
இந்தியாவில் முற்றிலும் உள்நாட்டில் ‘5ஜி’ என்று அழைக்கப்படுகிற 5ம் கட்ட தொலைதொடர்புச் சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இது செல்போன் வாடிக்கையாளர்களுக்கு அதிகளவிலான செயல்திறனை வழங்க உறுதி செய்யப்படுகிறது. உலகில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக, இணையதள தேவை அதிகரித்து வருகின்றது. இந்தியாவில் தற்போது 4ஜி சேவைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு அடுத்தகட்டமாக உயர்ந்த சேவையை வழங்க மத்திய அரசு நடவடிக்கை வருகின்றது. இது 4ஜி சேவையை விட பல மடங்கு வேகமான சேவையாக இருக்கும்.
இந்நிலையில், இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலம் தற்போது ஆன்லைனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை முதல் 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஏலம் நடைபெறுகிறது. இந்த அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பாரத் ஏா்டெல், வோடஃபோன் போட்டியிடுகின்றன. இந்த ஏலத்தில் மற்ற உலக பணக்காரரான கெளதம் அதானியின் அதானி என்டா்பிரைசஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இந்த ஏலத்தில் 600 மெகா ஹொ்ட்ஸ், 700 மெகா ஹொ்ட்ஸ், 900 மெகா ஹொ்ட்ஸ், 1800 மெகா ஹொ்ட்ஸ், 2100 மெகா ஹொ்ட்ஸ், 2300 மெகா ஹொ்ட்ஸ், 2500 மெகா ஹொ்ட்ஸ், 3300 மெகாஹொ்ட்ஸ் மற்றும் 26 கிகாஹொ்ட்ஸ் ஆகிய அலைவரிசைகளுக்காக ஏலம் நடைபெற உள்ளது. 4,30,000 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு பிரிவுகளாக 72 கிகாஹொ்ட்ஸ் அலைவரிசைக்கான ஏலம் நடைபெறுகிறது.

