நாட்டின் புதிய ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்றத்தை அடுத்து இலங்கை அதிபர் ராணில் விக்ரமசிங்கே வாழ்த்து கூறியுள்ளார்.
ராணில் விக்ரமசிங்கே வாழ்த்து
இந்தியா நாட்டின் புதிய ஜனாதிபதியாக திரவுபதி முர்மு வெற்றி பெற்றார். இதையடுத்து புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழா இன்று பாராளுமன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கிடையே, பாராளுமன்ற அலுவலகத்தில் நாட்டின் 15வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் கவர்னர்கள், முப்படை தளபதிகள், பல்வேறு நாடுகளின் தூதர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில், இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள திரவுபதி முர்முவுக்கு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வாழ்த்து தெரிவித்துள்ளார்.

