முறையான ஆதாரங்கள் இல்லாமல் வழக்கு தொடர்ந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிமன்ற வழக்கு
தமிழகத்தில் சட்டவிரோதமாக இயங்கும் பார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி சென்னை பாடியைச் சேர்ந்த பாலசந்தர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும், இதேபோல் அண்ணாநகரில் உள்ள மால் ஒன்றில் உள்ள மொட்டைமாடி பாருக்கு சீல் வைக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதிகள், ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் வழக்கு தொடர்ந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தனர். இதனைத்தொடர்ந்து மனுதாரர் தனது மனுவை திரும்பப் பெற்றார்.

