முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அடுத்த மாதம் நடைபெறும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெறயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜிஎஸ்டி கூட்டம்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார். பின்னர் 14ம் தேதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சில நாட்கள் ஓய்வெடுத்த பின்னர் 18ம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இந்நிலையில், இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெறயுள்ளது. இந்த கூட்டத்தில் நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். இக்கூட்டத்தில் அடுத்த மாதம் மதுரையில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கான தேதி ஏற்பாடு குறித்தும், செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

