கனியாமூர் தனியார் பள்ளியின் விடுதி உரிய அனுமதியின்றி நடத்தப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தனியார் பள்ளி விடுதி
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 12ம் வகுப்பு மாணவி கடந்த 13 தேதி மர்மமான முறையில் பள்ளி விடுதியில் உயிரிழந்தார். இது தொடர்பாக உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், இந்த வழக்கில் அந்த தனியார் பள்ளியின் முதல்வர் சிவசங்கரன், இரண்டு ஆசிரியர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணை
விசாரணையில், பள்ளியின் விடுதியில் சுமார் 83 மாணவர்களும் 24 மாணவிகளும் தங்கியிருந்தது தெரிய வந்தது. மேலும், பள்ளி நிர்வாகம் விடுதிக்கான உரிமம் பெறாமல் இருந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இதன்பெயரில் அந்த விடுதிக்கு சீல் வைக்கப்படும் என்று கமிஷன் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி கூறினார்.

