புஷ்பா படத்திற்கு 3ம் பாகம் வரை எடுக்கலாம் என்று நடிகர் பகத் பாசில் கூறியுள்ளார்.
புஷ்பா படம்
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் நடித்து கடந்த 2021ம் ஆண்டு இறுதியில் வெளியான படம் புஷ்பா. சுகுமார் இயக்கிய இத்திரைப்படம் திரையரங்கில் சக்கைபோடு போட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று ஐந்து மொழிகளில் வெளியான இப்படம் சுமார் 350 கோடி வரை வசூல் செய்தது. மேலும், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் பகத் பாசில் சமீபத்தில் புஷ்பா படம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அப்போது அவர் ‘புஷ்பா படத்தை 3ம் பாகம் வரை எடுக்கலாம். அந்த கதையில் சொல்ல வேண்டியது நிறைய இருக்கிறது’ என்று கூறியுள்ளார். இதனால் புஷ்பா படத்தின் 3ம் பக்கமும் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

