விலங்களுடன் முகத்தோடு முகத் தொடர்பில் நீண்ட நேரம் இருந்தால் குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக எய்ம்ஸ் பேராசிரியர் பியூஷ் ரஞ்சன் கூறியுள்ளார்.
குரங்கு அம்மை
உலகம் முழுவதும் 6,000க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதுவரை குரங்கு அம்மை பாதிப்பால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே இந்தியாவில் முதல் குரங்கு அம்மை பாதிப்பு கேரள மாநிலத்தில் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கேரள எல்லை பகுதிகளில் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.
உயிருக்கு ஆபத்து
இந்நிலையில், ‘குரங்கு அம்மை தொடக்கத்தில் காய்ச்சல் மட்டும் ஏற்படும். பின்னர் ஐந்து நாட்களுக்கு பிறகு உடலில் கட்டிகள், ரேஷஷ்கள் ஏற்படும். இந்த ரேஷஷ் கண்களில் ஏற்பட்டால் பார்வை பறிப்போகும் அபாயம் உள்ளது. விலங்களுடன் முகத்தோடு முகத் தொடர்பில் நீண்ட நேரம் இருந்தால் குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மேலும், இந்த தொற்று குழந்தைகளுக்கு ஏற்பட்டால் அது உயிருக்கே ஆபத்தாக முடியலாம்’ என்று எய்ம்ஸ் பேராசிரியர் பியூஷ் ரஞ்சன் கூறியுள்ளார்.

