ஓபிஎஸ்க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஓபிஎஸ்க்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் கொரோனாவால் நேற்று மட்டும் 2,342 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஓபிஎஸ்க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக என தகவல் வெளியானது. சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று காமராஜ் பிறந்தநாளில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓபிஎஸ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

