இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, தற்காலிக அதிபராக நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே
இலங்கையில், கடந்த 9ம் தேதி அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்து சூறையாடினர். போராட்டக்காரர்கள் வருவதற்கு முன்பு அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையை விட்டு வெளியேறினார். அவர் நாட்டை விட்டு தப்பி விட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, தற்காலிக அதிபராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். நாட்டில் அவருக்கு எதிரான போராட்டங்களுக்கு மத்தியில் அவர் பதவி ஏற்றுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

