சென்னை விமான நிலையத்தில் 3 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட நன்கு நபர்களை கைது செய்துள்ளார்.
தங்கம் கடத்தல்
சென்னை, மீனம்பாக்கத்தில் உள்ள காமராஜர் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சுங்க அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது தாய்லாந்திலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னை அசோக் நகரைச் சேர்ந்த சாகுல் அமீது(30), திருச்சியை சேர்ந்த ரசீத்(28), மலேசியாவில் இருந்து வந்த சென்னை மண்ணடியை சேர்ந்த அருண் பாண்டியன்(30), துபாயில் இருந்து வந்த புதுக்கோட்டையை சேர்ந்த பழனிசாமி (32) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் 4 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்கள் நான்கு நபர்களையும் சோதனை அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அப்போது அவர்களது உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த தங்கத்தை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடு்த்து 4 பேரிடம் இருந்தும் 1 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ 80 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், 4 பேரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

