முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச இலங்கையில் இருந்து தப்பி செல்ல முயற்சித்ததாக தகவல் வெளியதாகியுள்ளது.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச
இன்று அதிகாலை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றதாக கூறப்படுகிறது. அவரின் ஆவணங்களை சரிபார்த்த குடிவரவுத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். இதுகுறித்து பேசிய குடிவரவு அதிகாரிகள், முன்னாள் அமைச்சரின் ஆவணத்தை சரிபார்த்த பொது ஆவணங்கள் சட்டமுறைப்படி சரியாக இல்லை.மேலும், சாதாரண பயணிகள் செல்ல அனுமதியளிக்கப்பட்டபோதும் , விமான நிலையத்தில் இருந்த பயணிகள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பசில் ராஜபக்ச மீண்டும் நாட்டுக்குள் திரும்பி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ள முடியாமல் அதிகாலை வரை விமான நிலையத்தில்காத்திருந்து விமான நிலையத்தை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

