அரசியல்தமிழ்நாடு

தி.மு.க : அய்யப்பன் எம்.எல்.ஏ மீதான கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை ரத்து – பொதுச்செயலாளர் அறிக்கை !

திமுகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட அய்யப்பன் எம்.எல்.ஏ மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்துள்ளது. அவர் திமுக உறுப்பினராக செயல்பட அக்கட்சி அனுமதி அளித்துள்ளது.

ஒழுங்கு நடவடிக்கை ரத்து

கடலுார் சட்டமன்ற தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ அய்யப்பன் ஆவார். தனது ஆதரவாளரை, கடலுார் மாநகராட்சி மேயர் ஆக்க சில கவுன்சிலர்களை கடத்தி சென்று தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அவர் மிதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து கட்சிக் கட்டுபாட்டை மீறியதாக அய்யப்பனை தி.மு.க அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து, இடைநீக்கம் செய்யப்பட்டார
இந்நிலையில், தமிழக பாஜகவில் சேரும்படி, அய்யப்பன் எம்.எல்.ஏவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கட்சி தலைமையிடம் வருத்தம் தெரிவித்து அய்யப்பனிடம் கடிதம் பெற்று அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை தி.மு.க., நேற்று ரத்து செய்துள்ளது.

இதுகுறித்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கையில், ‘அய்யப்பன் தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து, மீண்டும் கட்சி பணியாற்ற அனுமதிக்குமாறு, தலைவரிடம் கோரிக்கை வைத்தார். அக்கடிதத்தை ஏற்று, அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு கட்சி உறுப்பினராக தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தனது அரிக்களையில் தெரிவித்துள்ளார்.

Related posts