எலான் மஸ்க் தனது நியூராலிங்க் நிறுவனத்தில் பணிபுரியும் ஷிவோன் சிலிஸ் என்ற பெண் ஊழியருடன் ரகசிய உறவில் இருந்துள்ளார். இதனால் எலான் மஸ்க்கிற்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக கூறப்படுகிறது.
எலான் மஸ்க்கின் குழந்தைகள்
பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கப்போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்ப்படுத்தினார். 51 வயதான இவர் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களில் சி.இ.ஓவாக பதவி வகித்து வருகிறார். தனது நியூராலிங்க் நிறுவனத்தில் பணிபுரியும் ஷிவோன் சிலிஸ் என்ற 36 வயது பெண் ஒருவருடன் எலான் மஸ்க் ரகசிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், இருவருக்கும் இரட்டை குழந்தையும் பிறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எலான் மஸ்க்கிற்கு தனது முதல் மனைவியுடன் ஏற்கனவே ஐந்து குழந்தை இருக்கிறது. மேலும், கனடாவை சேர்ந்த பிரபல பாடகர் மூலம் இரு குழந்தைள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் முழுமையாக கைப்பற்றிய பிறகு எலான் மஸ்க்கின் ரகசிய காதலியான ஷிவோன் சிலிஸ் ட்விட்டர் நிறுவனத்தை முன்னின்று நடத்துவார் என்றும் சொல்லப்படுகிறது.

