ஜூலை 11ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடத்த எவ்வித தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பொதுக்குழு நடத்தலாம்
கடந்த 23ம் தேதி சென்னை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காலாவதியாகிவிட்டது. அ.தி.மு.க பொதுக்குழு விவகாரத்தில் நட்பு ரீதியில் தீர்வு காண வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உச்சநீதிமன்றம் நீதிபதிகள் அறிவுரை வழங்கி உள்ளனர். பொதுக்குழு உறுப்பினராக உள்ள நீங்கள் பொதுக்குழுவில் பிரச்னையை தீர்த்துக் கொள்ளாமல் நீதிமன்றத்தை நாடியது ஏன்..? என கேள்வி எழுப்பினர். இந்நிலையில், ஜூலை 11ம் தேதி நடக்க இருக்கும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்கு நாங்கள் எப்படி தடை விதிக்க முடியும். பொதுக்குழு சட்டப்படி நடைபெற வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். உட்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது. மேலும், அ.தி.மு.க பொதுக்குழு விவகாரத்தில் சென்னை நீதிமன்றம் இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டனர்.

