பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு இறந்த கட்டுமான தொழிலாளர்களின் நியமனதாரர்களின் வாரிசுதாரர்களுக்கான நிவாரணத் தொகை மொத்தம் 3 கோடியை முதலமைச்சர் வழங்கினார்.
இறப்பு நிவாரண தொகை
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு இறந்த 60 கட்டுமான தொழிலாளர்களின் நியமனதாரர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 3 கோடி ரூபாய் பணியிடத்து விபத்து மரண நிவாரணத்தொகை வழங்கிடும் அடையாளமாக 7 நியமனதாரர்கள் வாரிசுதாரர்களுக்கு நிவாரணத் தொகைக்கான ஆணையை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

