தலாய் லாமாவின் 87-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வாழ்த்து
புத்த மதத்தின் தலைமை தலைவராக அறியப்படும் தலாய் லாமாவின் பிறந்த நாள் உலகின் பல்வேறு பகுதிகளிலில் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்தியாவின் இமாசலபிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் வசித்து வருபவர் தலாய்லாமா. 14-வது தலாய் லாமாவான இவர் கடந்த1959-ல் சீன ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியை அடுத்து இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இந்நிலையில், பிரதமர் மோடி தலாய் லாமாவின் 87-வது பிறந்த நாளை முன்னிட்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

