ராமேஸ்வரத்தில் நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமையை அடுத்து, தமிழகத்தில் உள்ள வடமாநிலத்தவரின் விவரங்களையும் சேகரிக்க டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கூட்டுபாலியல்
கடந்த வாரம் ராமேஸ்வரம் பகுதியில் மீனவ பெண் ஒருவர் கூட்டுபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். இந்த பாலியல் கொலை வழக்கில் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் 6 வடமாநிலத்தவரை கைது செய்தனர். பின்னர், விசாரணையில் இந்த வடமாநில கும்பல்தான் மீனவ பெண்ணை கூட்டுபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது.
இரட்டைக்கொலை
இதே போல், கடந்தமாதம் சென்னை, மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த ஆடிட்டர் மற்றும் அவரது மனைவியை வடமாநில கும்பல் பணத்திற்காக கொலை செய்தது. இவ்வாறு வடமாநிலத்தவரால், தமிழகத்தில் குற்ற சம்பவம் பெருகிவருகிறது. இதனையடுத்து, தமிழகத்தில் தங்கியுள்ள வடமாநிலத்தவரின் விவரங்களை சேகரிக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

எனவே, வெளி மாநிலத்தவர் தொடர்பான கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குல்பி , பானிபூரி ஆகியவற்றை வியாபாரம் செய்யும் வெளிமாநிலத்தவர் அனைவரின் விவரமும் காவல் நிலையங்களில் பதிவு செய்யபட்டிருக்க வேண்டும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
முக்கிய அறிவிப்பு
மேலும், ராமேஸ்வரம் நகராட்சி சார்பில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.இந்த அறிக்கையில், ராமேஸ்வரம் நகராட்சிக்குட்பட்ட இடங்களில் குடியிருக்கும் வெளிமாநில நபர்கள் மற்றும் வெளிமாநில் நபர்களை வைத்து வீடு கட்டும் உரிமையாளர்கள், இன்ஜினியர்கள், கட்டிட காண்டராக்டர்கள் மற்றும் விடுதி உரிமையாளர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், இறால் பண்னை உரிமையாளர்கள், பாணிபூரி மற்றும் குல்பி ஐஸ் வைத்து தொழில் செய்து வருபவர்கள் உள்ளூர்வாசிகள் மூலமாக வேலை பார்க்கும் வெளி மாநில ஒவ்வொரு நபர்களின் கீழ்க்கண்ட ஆவணங்களை இராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்தில் வரும் 15.06.2022 தேதிக்குள் உடனடியாக சமர்ப்பித்து பதிவு செய்யப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் நிறுவனத்தின்மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

விவரங்கள்
ஒவ்வொரு மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள வடமாநிலத்தவரின் பெயர், வயது, புகைப்படம், ஆதார் அட்டை, கைபேசி எண், தற்போது செயல்படும் நிறுவனத்தின் பெயர், நிஐவனத்தின் தற்போதைய முகவரி, நிறுவனத்தின் உரிமையாளரின் பெயர், நிறுவனத்தின் உரிமையாளரின்ஆதார் எண், கைபேசி எண், தற்போதைய இருப்பிட முகவரி ஆகிய விவரங்களை சேகரிக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க இத்தகைய விவரங்களை சேகரிக்க வேண்டும் என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

