Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, May 14
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»வணிகம்»Public Cryptocurrency vs Private Cryptocurrency என்ன வித்தியாசம்?

Public Cryptocurrency vs Private Cryptocurrency என்ன வித்தியாசம்?

April 30, 20222 Mins Read27 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

கிரிப்டோகரன்சியின் மிக முக்கிய தொழில்நுட்பமே blockchain தொழில்நுட்பம் தான். அதீத பாதுகாப்பு காரணமாக தற்போது பிளாக்செயின் தொழில்நுட்பம் பெரிய அளவில் விரும்பத்தகுந்த ஒன்றாக உள்ளது.

Blockchain என்றால் என்ன?

“Blockchain is a distributed, decentralized, public ledger”.  பிளாக்செயின் என்பது பல்வேறு இடங்களில் பராமரிக்கப்படுகின்ற பரிவர்த்தனை கணக்குப்புத்தகம் என பொருள்.

உதாரணத்திற்கு நாம் வங்கிகளில் மேற்கொள்ளும் பண பரிவர்த்தனை குறித்த தகவல்கள் அனைத்தும் வங்கியின் சர்வரில் (ஒரே இடம்) சேமிக்கப்பட்டு இருக்கும். ஆனால் blockchain தொழில்நுட்பத்தில் பல்வேறு இடங்களில் ஒரேவிதமான தகவல்கள் சேமிக்கப்பட்டு இருக்கும்.

ஒரு பரிவர்த்தனை நடக்கும் போது அது குறித்த விவரம் “block” ஆக அனுப்பப்படும். அந்த block இல் இருக்கும் தகவல்களை என்கிரிப்ட் செய்து ஒவ்வொரு பெட்டிக்கும் “hash” என்ற ஒரு அடையான எண்ணை கொடுப்பார்கள். ஒவ்வொரு பெட்டியும் தனித்துவமான hash ஐ கொண்டிருக்கும்.

இரண்டாவது block இல் முதல் block இன் hash பதிவிடப்பட்டு இருக்கும். இப்படித்தான் ஒவ்வொரு பெட்டிக்கும் இருக்கும். இப்படி பல block ஒன்றோடு ஒன்று செயின் போல இணைந்து இருப்பதனால் தான் இதனை Blockchain என அழைக்கிறோம்.

இதையும் படிக்க :  வெண்மை புரட்சிக்கு வித்திட்ட டாக்டர் வர்கீஸ் குரியன் வாழ்க்கையும் அமுல் நிறுவனம் தோன்றிய வரலாறும்!

பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் இரண்டு முக்கியமான பிரிவுகள் உண்டு. அவைதான் public மற்றும் private பிளாக்செயின். கிரிப்டோகரன்சியில் இவற்றில் எந்த பிரிவு பயன்படுத்தப்படுகிறதோ அதனைப்பொறுத்து அந்த கிரிப்டோகரன்சியை public அல்லது private என பிரிக்கலாம்.

Public Blockchain :

Public Blockchain என்பது முற்றிலும் வெளிப்படையான Blockchain அமைப்பு. அதிலே யார் வேண்டுமானாலும் சேரலாம். அந்த தகவல்களை பார்க்கலாம், படிக்கலாம். அதில் பங்களிப்பும் செய்யலாம்.

இவர்கள் தான் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. எனவே இதனை Public Blockchain என அழைக்கிறோம். தற்போது பிட்காயினில் Public Blockchain தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது .

இது போன்று மக்களால் நிர்வகிக்கப்பட்டு மக்களால் சரிபார்க்கப்படும் Blockchain அமைப்பு முறையில் உருவாக்கப்பட்டுள்ள கிரிப்டோகரன்சிகள் அனைத்தும் Public Cryptocurrency என அழைக்கப்படும்.

எப்படி ஒருவர் தானாகவே இதில் பங்கேற்று பங்களிப்பு செய்வார்? அவருக்கு ஏதாவது கிடைத்தால் தானே செய்வார்? அதற்காகத்தான் Public Cryptocurrency கள் அனைத்திலும் இன்சென்டிவ்ஸ் வழங்கும் முறை இருக்கிறது. இதனைத்தான் நாம் மைனிங் என அழைக்கிறோம். இதனால் தான் பலரும் இதிலே தானாகவே இணைகிறார்கள்.

இதையும் படிக்க :  ஐஸ் கிரீம் வணிக பொருள் ஆனது எப்படி ? வாருங்கள் தெரிந்துகொள்வோம்

மக்கள் தான் இதை கட்டுப்படுத்துகிறார்கள்  என்ற உறுதி கிடைத்தாலும் கூட  Public Cryptocurrency கள்  உருவாவதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது.

Private Blockchain :

இந்த பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் குறிப்பிட்ட அமைப்பு அல்லது நிறுவனத்தால் அனுமதிக்கப்பட்ட நபர்களால் மட்டுமே பங்களிப்பு செய்திட முடியும், பரிவர்த்தனை தகவல்களை பெற முடியும். Invitation இல்லாதவர்களால் இதிலே இணைய முடியாது.

இதிலே பங்கேற்கும் அனுமதிக்கப்பட்ட நபர்களிடம் மட்டுமே பரிவர்த்தனை தகவல்கள் அனைத்தும் இருக்கும் [Shared Ledger]. சில Private கிரிப்டோகரன்சிகளிலும் மைனிங் என்பது இருக்கிறது. ஆனால் எவ்வளவு ரிவார்ட்ஸ் என்பதையெல்லாம் குறிப்பிட்ட ஒரு அமைப்பு தான் தீர்மானிக்கும்.

இதுதவிர Permissioned Blockchain என்ற ஒரு பிரிவும் உள்ளது. Public Blockchain மற்றும் Private Blockchain இந்த இரண்டிலும் இருக்கக்கூடிய சில வசதிகளை கலந்து இதனை உருவாக்கி இருப்பார்கள்.

Blockchain Cryptocurrency economics private cryptocurrency public cryptocurrency trade
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleநீதிமன்றங்களிலும், தொழில்நுட்பக் கல்வியிலும் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும் – பிரதமர் மோடி பேச்சு!
Next Article ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவில் வரலாறு

Related Posts

வணிகம்

மீண்டும் ஏறுமுகம் : மாலையில் ரூ.880 உயர்ந்த தங்கம்

March 30, 2026
தமிழ்நாடு

வாரத்தின் முதல் நாளிலேயே குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,08,800-க்கு விற்பனை

March 30, 2026
வணிகம்

மீண்டும் அதிர்ச்சி : ரூ.14 ஆயிரத்தை நெருங்கும் ஒரு கிராம் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் தெரிஞ்சுக்கோங்க !

March 28, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,525 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,019 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,977 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,525 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,019 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,977 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.