வணிகம்

சாப்ட்வேர் உலகின் சாம்ராட் – பில் கேட்ஸ் வாழ்க்கை வரலாறு

போர்ப்ஸ் நாளிதழின் கூற்றுப்படி உலகின் டாப் பணக்காரராக எலன் மஸ்க் இருக்கலாம். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு உலகின் பணக்காரர் என்றவுடன் நினைவுக்கு வருபவர் பில்கேட்ஸ் தான். 31 வயதில் பில்லியனர் , 39 வயதில் உலகின் நம்பர் 01 பணக்காரர் என அசத்தினார்.

பில்கேட்ஸ் எப்படி பணக்காரர் ஆனார்? அவருடைய எந்த செயல்பாடு அல்லது பழக்கவழக்கங்கள் அவரை உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆக்கியது என்பது போன்றவற்றினை தான் இப்பகுதியில் பார்க்க இருக்கிறோம். இந்த பதிவு உங்களுக்கும் உங்களது நண்பர்களுக்கும் குழந்தைகளுக்கும் உத்வேகம் அளிக்கும் என நம்புகிறோம்.

பில்கேட்ஸ் சாதித்ததற்கு பின்வருபவை முக்கிய காரணிகளாக அமைந்தது என்கிறார்கள்,

> சூழல் / வாய்ப்புகள்
> கடின உழைப்பு
> தனித்திறன்
> எதிர்காலத்தை கணிக்கும் திறன்

சூழல் / வாய்ப்புகள்

வெற்றிக்கு திறமை முக்கியம், அதைவிட வாய்ப்புகள் முக்கியம். பில்கேட்ஸ் தன்னுடைய 13 ஆம் வயதிலேயே கணினியை பயன்படுத்த வாய்ப்பு கிடைத்தது. அப்போது மிகவும் அரிதாக கருதப்பட்ட கணினியை பில்கேட்ஸ் சேர்ந்த பள்ளியில் வாங்கியிருந்தார்கள். சிறு தொகையினை கொடுத்து அதனை பயன்படுத்தி வந்த பில்கேட்ஸ் தன்னிடம் இருக்கும் பணம் தீரும் போது இலவசமாக பயன்படுத்துவதற்கு ஏதுவாக கணினியை ஹேக் செய்தார்.

இதனால் அவர் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் இவரிடம் இருக்கும் திறனை அறிந்து இதுபோன்று வேறு எவரும் செய்கின்றனரா என்பதனை சோதிக்கும் பொறுப்பினை விட்டனர். மேலும் மாணவர்களுக்கான வகுப்பினை தானாக ஒதுக்குகின்ற ஒரு புரோகிராமை செய்ய சொன்ன போது செய்து கொடுத்த பில்கேட்ஸ், அதிக பெண்கள் இருக்கும் வகுப்பில் தனக்கு இடம் ஒதுக்கும்படியும் செய்துகொண்டார்.

அதிக நேரம் கணினியை பயன்படுத்துவதற்காக கிடைத்த இந்த வாய்ப்பு தான் எதிர்காலத்தில் ஒரு பில்லியனர் உருவாவதற்கான காரணியாக அமைந்தது.

கடின உழைப்பு 

ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் படிக்க சென்றபோது புதிய கணிணி உருவாக்குவதற்கான விளம்பரம் ஒன்றினை பார்த்தார் . உடனடியாக அந்த நிறுவனத்திற்கு போன் செய்து உங்களுக்கு தேவையான புரோகிராம் என்னிடம் இருக்கின்றது வாங்கிக்கொள்கிறீர்களா என கேட்டார் .

அப்போது அவரிடம் அப்படி ஒரு புரோகிராம் இல்லை . நிறுவனம் ஒப்புக்கொள்ளாது என நினைத்திருந்தார் . ஆனால் அவர்கள் விருப்பம் தெரிவிக்க தன்னுடைய நண்பரான பவுல் உடன் இணைந்து இரவு பகலாக எழுதி முடித்தார் . கடுமையான உழைப்பிற்கு பிறகு எழுதி முடித்துவிட்டு அந்த நிறுவனத்திடம் 3000 டாலருக்கு விற்கிறார் . பில்கேட்ஸ் படிக்கும் காலத்திலும் சரி பிறகு கம்பெனி ஆரம்பித்த பிறகும் சரி கடின உழைப்பாளியாகவே இருந்துவந்திருக்கிறார்.

எதிர்காலத்தை கணிக்கும் திறன்

பில்கேட்ஸ் தனது BASIC எனப்படும் கம்ப்யூட்டர் புரோகிராமை விற்றார். விற்பதற்கு முன்னதாக அந்த புரோகிராமை அவர் Copyright செய்து வைத்திருந்தார். தனது புரோகிராம் க்கு இதனை விட அதிக விலை எதிர்காலத்தில் கிடைக்கும் என நம்பியிருக்கலாம்.

இது நடந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு IBM கம்ப்யூட்டர் புரோகிராமை வாங்குவதற்காக அணுகியது. அப்போது இவரிடம் எந்த புரோகிராம் இல்லை. இருந்தாலும் சமயோஜிதமாக சிந்தித்து சியாட்டல் பகுதியில் உள்ளவரிடம் Copyright உடன் சேர்த்து புரோகிராமை வாங்கினார். பின்னர் அதனை Copyright இல்லாமல் IBM க்கு விற்றார். பொதுவாக Hardware பொருளை தான் விலைக்கு வாங்குவார்கள், Software ஐ யார் பணம் கொடுத்து வாங்க போகிறார்கள் என IBM நினைத்து இருக்கலாம். ஆனால் வாங்குவார்கள் என பில்கேட்ஸ் எண்ணியிருந்தார்.

எண்ணத்தை உண்மையாக்க உழைப்பது

ஆப்பிள் CEO ஸ்டீவ் ஜாப்ஸ், பில்கேட்ஸ் மற்றும் அவரது குழுவினருடன் Excel , word போன்றதொரு புரோகிராமை உருவாக்குமாறு கேட்டிருந்தார். பில்கேட்ஸ் அந்த வேலையில் மூழ்கியும் இருந்தார். ஆனால் இவர்களின் திறனில் ஜாப்ஸ் நிறைவடையவில்லை, இவர்களால் முடியாது என்றே எண்ணினார்.

ஆனால் மறுபக்கம் ஜாப்ஸ் சொல்லுகின்ற மாற்றங்கள் அனைத்தையும் செய்ய கடுமையாக முயன்றுகொண்டு இருந்தார். கிட்டத்தட்ட அந்த காலங்களில் தான் பில்கேட்ஸ் மெருகேறினார் என்றே கூறலாம். பின்னர் ஜாப்ஸ் க்கு கீழே பணிபுரிவது பிடிக்காமல் Windows எனப்படும் புரோகிராமை தயாரிப்பதை முதன்மையாக கொண்டு செயல்பட்டார் பில்கேட்ஸ்.

ஆனால் ஐடியா பலருக்கும் வரலாம், அதனை உண்மையாக்கி காட்டுபவர்களே வெல்கிறார்கள். அதனை செய்து காண்பித்தார் பில்கேட்ஸ். ஆம் Windows வெளியான பின்பு, ஒவ்வொரு வீட்டில் பயன்படுத்தப்படும் கணினியிலும் Windows இருந்தது, விலைக்கு வாங்கப்பட்டதாக இருந்தது.

பில்கேட்ஸ் நினைத்ததை விடவும் வேகமாக வளர்ந்தார்..

பில்கேட்ஸ் மில்லியனர் ஆனார் ..

பில்கேட்ஸ் உலகின் பணக்காரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார்..

நீங்களும் பில்கேட்ஸ் ஆகலாம். அதற்கு புதிதாக சிந்திக்க வேண்டும், அந்த சிந்தனையை உண்மையாக்க கடுமையாக உழைக்க வேண்டும். எதிர்காலத்தை அறிந்து செயலாற்ற வேண்டும்.

Related posts