Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, May 14
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»நிலக்கரி தட்டுப்பாட்டால் ஏற்படும் மின்வெட்டு; உண்மை நிலையை மறைக்கும் மத்திய அரசு!

நிலக்கரி தட்டுப்பாட்டால் ஏற்படும் மின்வெட்டு; உண்மை நிலையை மறைக்கும் மத்திய அரசு!

April 22, 20224 Mins Read16 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

”நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக பெரிய அளவில் வெற்றுப் பேச்சுக்களை பேசி மாய பிம்பத்தை உருவாக்கி வருகிறார் பிரதமர் மோடி. ஆனால் நாட்டில் 8 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி இருப்பு உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

 

பண வீக்கம் அதிகரித்து வருகிறது. நிலக்கரி பற்றாக்குறையால் மி்ன்வெட்டு ஏற்பட்டால் சிறுதொழில்களை அழித்துவிடும். இதனால், அதிக அளவில் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும்” என ராகுல் காந்தி நேற்றுமுன்தினம் நிலக்கரி பற்றாக்குறை குறித்து மத்திய அரசை சாடினார்.

ராகுல் குற்றம் சுமத்திய அடுத்த சில மணி நேரங்களில் தமிழகம், மஹாராஷ்ட்ரா, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட 12 மாநிலங்களில் திடீரென பல மணிநேர மின்வெட்டு இரவு நேரங்களில் நிகழ்ந்தது. நேற்று இரவும் இந்த நிலை பல மாநிலங்களில் நீடித்தது.

மத்திய பிரதேச பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிக்கொண்டிருக்கும் போதே மின்வெட்டு நிகழ்ந்தது. மேடையில் அவரும், “நிலக்கரி பற்றாக்குறையால் மின்வெட்டு நிகழ்கிறது” என்று விளக்கம் கொடுத்தார்.

கடந்த சில வாரங்களாக நிலக்கரி தட்டுப்பாடு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்தன. இப்போது நிலைமை மோசம் அடைந்ததன் விளைவாக மின்வெட்டு ஏற்பட துவங்கியுள்ளது.

மின்வெட்டு

கோடை காலம் தொடங்கி மின்சாரத்திற்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், நாடு முழுவதும் முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது மின்வெட்டு.

கடந்த ஆண்டு ஏப்ரலில் இந்தியாவின் அதிகபட்ச மின் தேவை என்பது 182.37 ஜிகாவாட் (GW) என்ற அளவில் இருந்தது. ஜூலை மாத வாக்கில் கோடைகாலத்தின் உச்சத்தில் இந்த தேவை 200 ஜிகாவாட் டாக அதிகரித்தது.

அதேநேரம், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தினசரி மின் தேவை சராசரியாக 187 ஜிகாவாட் என்ற அளவில் இருந்தது. அதுவே ஏப்ரல் 1-12 வரை 194 ஜிகாவாட் என்ற நிலையை எட்டியது. ஜூலையில் கோடைகாலம் உச்சத்தை தொடும் என்பதால் மின் தேவை கடந்த ஆண்டுகளை விட பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. இந்த தேவைகள் பூர்த்தி செய்யப்படுமா? என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வியும் நெருக்கடியும்.

நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி

நமது நாடு நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தியையே பெரிதும் நம்பியுள்ளது. இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியான 396 ஜிகாவாட்களில் கிட்டத்தட்ட 210 ஜிகாவாட் மின்சாரம் அனல் மின் நிலையங்களில் இருந்தே உற்பத்தி செய்யப்படுகிறது. இது இந்திய மொத்த மின் திறனில் சுமார் 53 சதவீதம். நிலக்கரியை ஆதாரமாக கொண்டு செயல்படும் அனல் மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பு பற்றாக்குறை நிலவுவதால் உற்பத்தி பாதிப்பு நிகழ்ந்துள்ளது.

இதையும் படிக்க :  "பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம்"-முதல்வர் மு.க.ஸ்டாலின் !

இந்தியாவை பொறுத்தவரை 173 அனல் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இவற்றில் 96 ஆலைகளில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த 96 ஆலைகளில் 76 ஆலைகள் உள்நாட்டில் கிடைக்கும் நிலக்கரியை கொண்டு இயங்குபவை. 11 ஆலைகள் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மூலமாக இயங்குகின்றன.

ஏப்ரல் 13 ஆம் தேதி நிலவரப்படி, 173 அனல் மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு 23.17 மில்லியன் டன்கள் என்ற அளவில் இருந்தன. இந்த ஆலைகளுக்கான ஒரு நாள் நிலக்கரி தேவை 2.76 மில்லியன் டன்கள் என்பதால் மொத்த கையிருப்பு ஒன்பது முதல் பத்து நாட்கள் வரையே இருக்கும்.

நிலக்கரி விநியோகத்தில் ஏற்பட்ட தடங்கல்கள்தான் தட்டுபாட்டுக்கான மிக முக்கிய காரணியாக சொல்லப்படுகிறது. மத்திய அரசின் விதிமுறைகள்படி மின் உற்பத்தி நிலையங்கள் சராசரியாக குறைந்தது 24 நாட்கள் அளவுக்கு நிலக்கரி இருப்பை வைத்திருக்க வேண்டும்.

சில ஆண்டுகள் முன்புவரை இறக்குமதி நிலக்கரியை இந்தியா அதிகமாக சார்ந்து இருந்தது. கடந்த ஆண்டு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலை அதிகரித்ததால் பெரும்பாலான நிறுவனங்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியை சார்ந்து செயல்பட ஆரம்பித்தன. இதனால் இறக்குமதியில் 12 சதவீதம் சரிவு ஏற்பட்டது.

கோல் இந்தியா நிறுவனம்:

கோல் இந்தியா நிறுவனம் நாட்டின் நிலக்கரி உற்பத்தியில் கிட்டத்தட்ட 83 சதவிகிதம் பங்களிக்கிறது. இந்த நிறுவனத்தை சார்ந்தே பல அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம், பிஹார், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பெய்த கனமழை மற்றும் சுரங்கத் தொழிலாளர்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி வெகுவாகக் குறைந்தது.

இதையும் படிக்க :  இந்தியாவுடன் பாகிஸ்தான், வங்காளத்தையும் இணைப்பது உறுதி - ஹரியானா முதல்வர் !

இந்திய மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை நிலவுவது ஒன்றும் இப்போது நடக்கும் புதிய நிகழ்வு கிடையாது. ஒவ்வொரு ஆண்டும் பற்றாக்குறை பிரச்சனை எழுவதுண்டு. பற்றாக்குறை பிரச்சினையின் மற்றொரு சிக்கல் நிலக்கரி உற்பத்தியை விட அதிகமாக அதை விநியோகம் செய்வதே.

நிலக்கரி விநியோகத்தில், நாட்டின் மின்துறை – நிலக்கரி மற்றும் ரயில்வே ஆகிய அமைச்சகங்கள் இடையே சரியான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு இல்லை என்பதே பொதுவான உண்மை. உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியை அனல் மின் நிலையங்களுக்கு கொண்டு செல்ல ரயில்வேயின் ரேக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், பெரும்பாலும் நிலக்கரியை விநியோகிக்க இந்திய ரயில்வேயில் போதிய ரேக்குகள் கிடைக்கவில்லை என நிலக்கரி அமைச்சகம் குற்றச்சாட்டு சுமத்துவது வாடிக்கையான நிகழ்வு.

அதேநேரம், கோல் இந்தியா (சிஐஎல்) ரேக்குகளை ஏற்றி இறக்குவதில் தவறான முறைகளை பின்பற்றுவதாக, ரயில்வே துறையும் நிலக்கரி அமைச்சகமும் ஒன்றன்மீது ஒன்று குற்றம் சுமத்துகின்றன.

இப்படியான பரஸ்பர குற்றச்சாட்டுகள் மத்திய அமைச்சகங்கள் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளன. போதா குறைக்கு உக்ரைன் – ரஷ்யா போர் நெருக்கடியால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி விலை 44-55 சதவீதம் வரை உயர்ந்துள்ளதும் இந்தியா கவலைகொள்ள கூடிய விஷயமாக மாறியுள்ளது.

ஜூன் மாத இறுதி அல்லது ஜூலை தொடக்கத்தில் கோடை காலம் உச்சம் தொட வாய்ப்பு உள்ளதால், அடுத்த நான்கு மாதங்களுக்கு மின்சாரத் தேவை மேலும் அதிகரிக்கும்.

மின்சார தேவையை சமாளிப்பதற்கு ஏற்ற நிலக்கரி கையிருப்பு என்பது மிகக் குறைவாகவே உள்ளது. நிலைமையை சமாளிக்க திருத்தப்பட்ட நிலக்கரி இருப்பு விதிமுறைகளை வெளியிட்டுள்ள மத்திய அரசு, தட்டுப்பாடுகளை கண்காணிக்க மின், நிலக்கரி, ரயில்வே ஆகிய அமைச்சக அதிகாரிகள் அடங்கிய துணைக் குழு ஒன்றை நியமித்துள்ளது.

36 மெட்ரிக் டன் நிலக்கரியை இறக்குமதி செய்யயவும் அனுமதி அளித்துள்ளது. எனினும், அவை எப்போது கிடைக்கும் என்பது போன்ற நடைமுறை சிக்கல்களால் மின்வெட்டு என்பது தவிர்க்க முடியாததாக ஆகியுள்ளது. இதனால், அடுத்தடுத்த மாதங்களில் இந்தியா மின் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

#centralgovernment #coalinsufficiency #primeminister #rahulgandhi coal india
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஐஐடி: ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது -தமிழகத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா!
Next Article இந்த திட்டத்தை உடனே கைவிடுங்கள்.. ஸ்டாலினுக்கு ராமதாஸ் அறிவுறுத்தல்!

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,525 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,019 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,977 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,525 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,019 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,977 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.