சில தினங்களுக்கு முன்னர், ஐஐடி – இல் பயின்று வரும் 3 மாணவர்களுக்கு லேசான காய்ச்சல் தென்பட்டதால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் மூவருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்களோடு தொடர்புடைய 18 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில், 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.இதனைத் தொடர்ந்து மேலும் 666 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில், அதில் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஐஐடி – இல் மட்டும் 3 நாட்களில் 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறிகள் தென்பட்டதால் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளரான ராதாகிருஷ்னன் ஐஐடி – இல் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொற்று தடுப்பு நடவடிக்களை மேற்கொள்ளவும் வளாகத்திற்குள் கிருமிநாசினியை தெளிக்கவும் அறியுறுத்தினார். டெல்லி மற்றும் மகாராஷ்டிராவைத் தொடர்ந்து தமிழகத்திலும் தொற்று அதிகமாக தொடங்கியுள்ளது. அதனால் அனைவரும் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
previous post