இந்தியாசுற்றுசூழல்

டெல்லியில் டீசல் லாரிகளுக்கு தடை – காற்று தர மேலாண்மை ஆணையம்!

காற்று மாசு

பஞ்சாப் போன்ற மாநிலங்களில் விவசாய கழிவுகள் தொடர்ந்து எரிக்கப்படுவது, வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை போன்ற காரணங்களால் அண்டை மாநிலமான டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இன்று முதல் தொடக்கபள்ளிகள் மூடப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காற்று தர மேலாண்மை

இந்நிலையில், டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த டீசல் மூலமாக இயங்கும் லாரிகளுக்கு தடை விதித்து காற்று தர மேலாண்மை ஆணையம் உத்தரவித்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் லாரிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts