இந்தியாசமூகம்

உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்பு !

உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு. லலித்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தலைமை நீதிபதி

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி என்.வி. ரமணா பதவியேற்றார். இவர் நேற்று பணி ஓய்வு பெற்றதால் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி யு.யு.லலித்தை நியமிக்க தலைமை நீதிபதி என்.வி.ரமணா பரிந்துரை செய்தார். இதற்கான கடிதத்தை அவர் மத்திய அரசிடம் முன்பே வழங்கியிருந்தார்.இந்நிலையில், இந்திய உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி யு.யு.லலித் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Related posts