அரசியல்இந்தியாசமூகம்

பொருளாதார நெருக்கடியால் இலங்கையை சேர்ந்த 8 பேர் தமிழகம் வருகை !

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் இலங்கையை சேர்ந்த மேலும் 8 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

இலங்கையார் தஞ்சம்

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கை நாட்டிலுள்ள மக்கள் வேறு நாடுகளுக்கு தஞ்சம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கையை சேர்ந்த மேலும் 8 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்தனர். தனுஷ்கோடி அருகே உள்ள மணல் திட்டு பகுதியில் தஞ்சமடைந்த 8 பேரிடம் கடலோர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, தஞ்சம் வந்த குடும்பத்தில் சின்ன குழந்தைகளும் வந்ததால் அவர்களுக்கு போலீசார் தண்ணீர் கொடுத்து வரவேற்றனர். இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது. மேலும், நெகிழ்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.

Related posts