ஆன்மீகம்இந்தியாபயணம்

திருப்பதிக்கு 300 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்து கழகம் !

பிரம்மோற்சவ விழாவையொட்டி தமிழகத்திலிருந்து திருப்பதிக்கு 300 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு பேருந்துகள்

வரும் 27-ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 5-ம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொண்டாடப்பட உள்ளது. மாட வீதிகளில் நடைபெறும் சாமி வீதி உலாவில் இந்த ஆண்டு பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த பிரமோற்சவ விழாவில் தமிழகத்தில் இருந்து பெருமளவில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பெயரில் தமிழகத்திலிருந்து திருப்பதிக்கு 300 சிறப்பு பேருந்துகள் ஆந்திர மாநில அரசு போக்குவரத்து துறை சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 150 சிறப்பு பேருந்துகளும், ஆந்திர மாநில அரசு சார்பில் 150 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts