தமிழ்நாடு அரசு சார்பில் சின்னத்திரை மற்றும் திரைப்படங்களுக்கான விருதுகள் வழங்கும் விழா வரும் செப்டம்பர் 4-ம் தேதி நடைபெறவுள்ளது.
விருது வழங்கும் விழா
தமிழ்நாடு அரசு சார்பில் திரைப்படங்கள், சின்னத்திரை மற்றும் எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா வரும் 4-ம் தேதி மாலை 5.00 மணியளவில் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் தமிழ்நாடு அமைச்சர்கள் கலந்துகொண்டு, 2009 முதல் 2014-ம் ஆண்டுகள் வரை தேர்வு செய்யப்பட்ட சிறந்த திரைப்படங்கள் மற்றும் நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கு காசோலை, நினைவுப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்குகிறார்கள்.
மேலும், இந்த விருதுகள் வழங்கும் விழாவில், மொத்தம் 314 பேருக்கு ரூ.52 லட்சத்து 75 ஆயிரத்திற்கான காசோலையும், தங்கப்பதக்கங்கள், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது.

