16 வயது சிறுவனை ஏமாற்றி மதமாற்றம் செய்து திருமணம் செய்த 22 வயது பெண்ணையும் மற்றும் பெண்ணின் குடும்பத்தினரையும் போலீசார் கைது செய்தனர்.
சிறுவன்
உத்தரபிரதேசம் கான்பூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் அங்கு உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்து வருகிறான். அந்த சிறுவன் சமூகவலைத்தளங்களை பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறான்.
சமூகவலைத்தளம்
அந்த சிறுவனுக்கும் பெண்ணுக்கும் சமூகவலையத்தளம் மூலம் தொடர்பு உருவாகியுள்ளது. இருவரும் தொடர்ந்து பல நாட்களாக பேசிக்கொண்டிருந்தனர். இதனால் ஒருவருக்கொருவர் நல்ல பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
இளம்பெண்
22 வயதான அந்த பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமாகி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே விவாகரத்து பெற்றதாக சொல்லப்படுகிறது. மேலும், அந்த பெண்ணுக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. ஆனால் அந்த பெண் இந்த சிறுவனை தொடர்ந்து தனது வீட்டுக்கு அழைத்ததாக கூறப்படுகிறது.
திருமணம்
அதனைத்தொடர்ந்து அந்த பெண்ணின் பெற்றோர்கள் தங்களது மகளுக்கும் அந்த 16 வயது சிறுவனுக்கும் இஸ்லாம் முறைப்படி திருமணம் நடத்தி வைத்திருக்கிறார்கள். மேலும், அந்த சிறுவனை இஸ்லாம் மதத்திற்கு வலுக்கட்டாயமாக மதம் மாற்றியிருக்கிறார்கள்.
புகார்
அதன் பின்னர் அங்கிருந்து தப்பி வீடு திரும்பிய சிறுவன், தனது தாயிடம் தான் பழகிவரும் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றதாக கூறியுள்ளான். அவனை இஸ்லாம் மதத்திற்கு மாற்றி தனக்கு திருமணம் செய்து வைத்ததையும் தனது தாயாரிடம் கூறினான்.
வழக்கு பதிவு
அதிர்ச்சியடைந்த அவனது தாயார் போலீசில் புகாரளித்தார். அதன்பெயரில் போலீசார் இதனைத்தொடர்ந்து அந்த 22 வயது பெண், அவளது பெற்றோர் மற்றும் மதகுரு ஆகிய நான்கு பேர் மீதும் IPC பிரிவுகள் 363 மற்றும் 342 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.