அரசியல்இந்தியாதமிழ்நாடு

பிரதமர் மோடி ஒருநாள் பயணமாக தமிழகம் வருகை தருகிறார் ! 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் !

பிரதமர் மோடி இன்று ஒருநாள் பயணமாக தமிழகம் வருகை தருகிறார். இன்று ரூ 31,400 கோடி ரூபாய் மதிப்பிலான 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

மோடி வருகை

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு அமைந்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக இன்று தமிழகம் வருகிறார். சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு ரூ 31 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

திட்டங்கள்

பிரதமர் மோடியின் பாதுகாப்பிற்காக 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பட்டு செய்யப்பட்டுள்ளது. சுமார் ரூ 31, 400 கோடி ரூபாய் மதிப்பிலான 11 திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் 4 திட்டங்கள், ரயில்வே துறை திட்டங்கள், நகர்ப்புற வீட்டு வசதித் துறை திட்டங்கள், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி.

ரூபாய் 500 கோடி மதிப்பில் மதுரை-தேனி 75 கிலோ மீட்டர் அகல ரயில்பாதை திட்டம்.

ரூபாய் 590 கோடி மதிப்பில் தாம்பரம்-செங்கல்பட்டு சென்னை புறநகர் ரயில் மூன்றாவது பாதை திட்டம்.

850 கோடி ரூபாய் மதிப்புள்ள 115 கிலோ மீட்டர் எண்ணூர்-செங்கல்பட்டு மற்றும் 271 கிலோமீட்டர் திருவள்ளூர்- பெங்களூரு குழாய் மூலம் இயற்கை எரிவாயு திட்டம் 850 கோடி ரூபாய் மதிப்பு.

‘பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு திட்டத்தின்’ கீழ் சென்னை கலங்கரை விளக்கம் அருகில் கட்டப்பட்டுள்ள 120 கோடி ரூபாய் செலவில் 1152 வீடுகள் கட்டும் திட்டத்தையும் மற்றும் சென்னை – பெங்களூரு 260 கிலோ மீட்டர் அதிவிரைவு சாலை ரூபாய் 14870 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். இந்த சாலை திட்டம் மூலம் சென்னை – பெங்களூர் பயண நேரம் குறையும் என்பது குறிப்பிட்டத்தக்கது.

சென்னை துறைமுகம் – மதுரவாயல் நான்கு வழி பறக்கும் சாலை

ரூபாய் 5850 கோடி மதிப்பில் சென்னை துறைமுகம் – மதுரவாயல் நான்கு வழி பறக்கும் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சாலையின் நீளம் 21 கிலோமீட்டர். இந்த நான்கு வழி சாலை நேரடியாக சென்னையின் எல்லையை துறைமுகத்தோடு இணைக்கப்படுகிறது. இந்த சாலை அமைப்பதால் இரண்டு மணி நேர பயணத்தை 15 நிமிடங்களாக குறையும் என சொல்லபடுகிறது.

கிராமங்களை தேசிய நெடுஞ்சாலைகளோடு இணைக்கும் விதமாக தருமபுரி-நெரலூரு தேசிய நெடுஞ்சாலையில் 3870 கோடி ரூபாய் செல்வதில் 94 கிலோமீட்டர் நான்கு வழிப்பாதை மற்றும் மீன்சுருட்டி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் 31 கிலோமீட்டர் 720 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது.

PM GATI Shakti scheme

பிரதமரின் ‘விரைவு சக்தி’ (PM GATI Shakti) தேசிய பெருந்திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டம் மப்பேட்டில் 159 ஏக்கர் நிலத்தில் அமையவிருக்கும் பன்முனை சரக்கு பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி மற்றும் கன்னியாகுமரி ரயில் நிலையங்களை 1800 கோடி மதிப்பில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் மோடி.

இத்தனை திட்டங்களை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

Related posts