Editor's Picksசமூகம் - வாழ்க்கைசினிமா

மஞ்சிமாமோகனை மணந்தார் கௌதம் கார்த்திக்!

காதல் ஜோடி 

2013-ம் ஆண்டு வெளியான கடல் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகனவர் கவுதம் கார்த்திக். நவரச நாயகன் கார்த்தியின் ஒரே மகனான இவர் தொடர்ந்து என்னமோ ஏதோ, வை ராஜா வை, ரங்கூன், ஹர ஹர மகாதேவகி, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், மிஸ்டர் சந்திரமவுலி, தேவராட்டம், ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இவர் கடந்த 2019ம் ஆண்டு வெளியான ‘தேவராட்டம்’ படத்தில் நடிக்கும்போது நடிகை மஞ்சிமா மோகனை காதலிக்க தொடங்கினார். இதனிடையே அன்மையில்  இருவரும் தங்களது காதலை உறுதி செய்தனர். மேலும், நவம்பர் 28-ம் தேதி திருமணம் செய்துகொள்ள போவதாகவும் அறிவித்தனர்.

திருமணம் 

இந்நிலையில், கௌதம் கார்த்திக், மஞ்சிமாமோகன் இருவருக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றுள்ளது. குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்ற இந்த திருமண விழாவில் திரைப்பிரபலங்கள் ஜீவா, ஆர்.ஜே.பாலாஜி, அசோக் செல்வன், ஆதி, சிவக்குமார, நடிகை நிக்கி கல்ராணி ஆகியோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

Related posts