அமைச்சர் பதிவு
கடந்த சில ஆண்டுகளாகவே உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று தி.மு.க வை சேர்ந்த பலரும் வலியுறுத்தி வந்தனர். இதனிடையே அண்மையில் இளைஞர் அணி செயலாளராக மீண்டும் உதயநிதி நியமிக்கப்பட்டார். இந்நிலையில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது 45-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனையொட்டி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பல அமைச்சர்களும், மூத்த தலைவர்களும் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க குரல் கொடுத்து வருகிறார்கள்.