சினிமாவெள்ளித்திரை

இணையத்தை மிரட்டும் ‘பாம்பாட்டம்’ பட ட்ரைலர்!

ட்ரைலர்

‘நான் அவன் இல்லை’, ‘திருட்டு பயலே’ படங்களை தொடர்ந்து நடிகர் ஜீவன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பாம்பாட்டம்’. இதில் மல்லிகா ஷெராவத், ரித்திகா சென், யாஷிகா ஆனந்த், சாய் ப்ரியா, சுமன், கிரிக்கெட் விளையாட்டு வீரர் சலீல் அங்கோலா, பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தை ஓரம்போ, வாத்தியார் படங்களை தயாரித்த வி.பழனிவேல் தனது வைத்தியநாதன் பிலிம் கார்டன் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இயக்குனர் வி.சி.வடிவுடையான் எழுதி, இயக்க, அம்ரிஷ் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ்,தெலுங்கு, இந்தி மொழிகளில் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.

இந்நிலையில், ‘பாம்பாட்டம்’ படத்தின் ட்ரைலரை நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ட்ரைலர் தற்போது பார்வையாளர்களை மிரட்டி வருகிறது.

Related posts