பெண்களின் இலவச மாநகர பேருந்துகள் தற்போது முழுமையாக பிங்க் நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இலவச பேருந்துகள்
தமிழகத்தில் மாநகர பேருந்துகள் அனைத்தும் ஒரே நிறத்தில் இருந்ததால் எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பேருந்துகளில் இருந்து சாதாரண பேருந்துகளை பெண்களால் அடையாளம் அடையாளம் காண முடியவில்லை. அதனால் பெண்கள் இலவசமாக பயணிக்கக்கூடிய சாதாரண பிங்க் நிறம் பெயிண்ட் பூசப்பட்டது. இதனை கடந்த வாரம் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஆனால் அந்த பேருந்துகளில் செலவு கட்டுப்பாடுகள் காரணமாக பேருந்துகளின் முன்புறமும், பின்புறமும் பிங்க் நிறம் பூசப்பட்டது.
இந்நிலையில், பெண்கள் இலவசமாக பயணிக்கும் சாதாரண பேருந்துகள் தற்போது முழுமையாக ‘பிங்க்’ நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

