தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தபடி இன்று அந்த 72 மணி நேர கெடு முடிவடையும் நிலையில் பா.ஜ.க. தலைமை செயலகத்தை முற்றுகையிடுமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
விலை குறைப்பு
கடந்த வாரம் வரை தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து வந்தது. அதிகபட்சமாக பெட்ரோல் 110 ரூபாய்க்கும், டீசல் 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த 21ம் தேதி மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதுள்ள கலால் விலையை அதிரடியாக குறைத்தது. அதன்பெயரில் பெட்ரோல் விலை 9 ரூபாயும், டீசல் விலை 7 ரூபாயும் குறைத்தது.
தமிழக அரசுக்கு கெடு
அதனைத்தொடர்ந்து மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். ஆனால் மாநில அரசு வரிகளை குறைக்காமல் மௌனம் சாதித்து வந்தது. ஜெய்ப்பூர் பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு சென்னை திரும்பிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 72 மணி நேரத்துக்குள் தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை 5 ரூபாய் குறைக்க வேண்டும். சமையல் எரிவாயு விலையை 100 ரூபாய் குறைக்க வேண்டும் தவறினால் தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம் என்று அறிவித்திருந்தார்.
ஆலோசனை
இந்நிலையில், அண்ணாமலை கொடுத்த 72 மணி நேர இன்றுடன் முடிகிறது. இதனிடையே நேற்று பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் நேற்று போராட்டம் குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனால் பா.ஜ.க அறிவித்தபடி கோட்டையை முற்றுகையிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பேட்டி
மேலும், இது குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் ஒருவர் பேசும்போது, திமுக தனது தேர்தல் அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று குறிப்பிட்டு இருந்தது. ஆனால் பெட்ரோல் விலையை வெறும் 3 ரூபாயை குறைத்துவிட்டு ஏமாற்றிவிட்டது.