6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சட்ட ரீதியாகச் சந்திக்க உள்ளதாக இயக்குனர் லிங்குசாமி கூறியுள்ளார்.
செக் மோசடி வழக்கு
கடந்த 2014-ம் ஆண்டு நடிகர் கார்த்தி, நடிகை சமந்தா ஆகியோரை வைத்து ‘எண்ணி ஏழு நாள்’ என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக, இயக்குனர் லிங்குசாமி, பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் ரூ.1 கோடியே 3 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அதன்படி ரூ.1 கோடியே 3 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை அந்த நிறுவனத்திடம் வழங்கினார். ஆனால் வங்கியில் போதிய பணம் இல்லாததாக கூறி பிவிபி நிறுவனம், இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர்களுக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தது.
மேல் முறையீடு
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில், இது தொடர்பாக லிங்குசாமி கூறுகையில், நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிராக நாங்கள் உடனடியாக மேல் முறையீடு செய்து சட்ட ரீதியாகச் சந்திக்க உள்ளோம்’ என கூறியுள்ளார்.