அரசியல்சமூகம்தமிழ்நாடு

“பா.ஜ.க. மற்றும் அண்ணாமலையை புறக்கணிக்க வேண்டும்” -காடுவெட்டி குருவின் மகள் ஆவேசம்!

பா.ஜ.க -வையும் அண்ணாமலையையும் புறக்கணியுங்கள் – ‘காடுவெட்டி’ குரு வின் மகள் ஆவேசம்!

“நம் வன்னிய மக்கள் பாஜகவையும் அண்ணாமலையையும் புறக்கணிங்கள்” என்று மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் மகள் ஆவேசமாக பேசியுள்ளார்.

காடுவெட்டி குரு

கல்வி மற்றும் அரசு வேலையில் இடஒதுக்கீடு பெறுவதற்காக BC பட்டியலில் இருந்து நூறுக்கும் மேற்பட்ட சாதிகளை MBC பட்டியலுக்கு மாற்ற வன்னியர் சங்கம் பல போராட்டங்களை முன்னெடுத்து வெற்றியடைந்தது. போராட்ட களத்தில் முக்கிய தலைவராக பார்க்கப்பட்டவர் காடுவெட்டி குரு.

இதனால், வன்னியர்களின் மிகப் பெரிய மரியாதையை பெற்றார். வன்னியர் சங்கத்தின் நிரந்தர தலைவர் என்று வர்ணிக்கப்பட்டார்.

இப்படி வன்னிய மக்களின் பேராதரவை பெற்ற காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை தான் பாஜகவிற்கு எதிராக பேசியுள்ளார்.

விருதாம்பிகை கேள்வி

அண்ணாமலை அவர்கள் வரலாறு தெரியாமல், வன்னியர் சமுதாய மக்களின் இட ஒதுக்கீட்டிற்கு ஏதிராக இருக்கும் அமைப்புகளை ஒன்று சேர்த்து அரசியல் செய்வது சரியில்லை.

மற்ற சமுதாய மக்களின் இட ஒதிக்கீட்டுக்காக போராடியவர்கள் வன்னியர்கள். அந்த போராட்டத்தில் 25 வன்னிய மக்கள் உயிர் தியாகம் செய்தனர். எந்த சமுதாய மக்களின் இட ஒதுக்கீட்டையம் வன்னிய மக்கள் எதிர்த்ததில்லை.

மேலும், வன்னியர்களுக்கான 10.5 % இட ஒதுக்கீட்டை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தபோது, அதை எதிர்த்து திமுக, அதிமுக, காங்கிரஸ் என முக்கிய அரசியல் கட்சிகள் வன்னியர்களுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்தனர்.

ஆனால், இதை பற்றி பாஜகவின் முக்கிய தலைவர்களோ, பாஜக எம்.எல்.ஏ -க்களோ  வாய் திறக்கவில்லை.

நாங்கள் கஷ்டத்தில் இருக்கிறோம் எங்களுக்கு உதவுங்கள் என்று அண்ணாமலையையோ, பாஜகவையோ நாங்கள் கேட்கவில்லை. எங்களை மேலும் துன்புறுத்தாதீர்கள் என்று தான் சொல்கிறோம். அதே சமயம் வன்னிய மக்களை எதிர்த்துக் கொள்வது அண்ணாமலை அவர்களுக்கு நல்லதில்லை என்றும் குருவின் மகள் விருதாம்பிகை கூறியுள்ளார்.

மேலும், நமது வன்னிய குல சத்திரியர்களை நான் கேட்டுக்கொள்வது, நீங்கள் யாரை வேண்டுமானாலும் தலைவராக ஏற்றுக்கொள்ளுங்கள், எந்த கட்சியில் வேண்டுமானாலும் பயணித்து கொள்ளுங்கள்.
ஆனால், நம் உரிமைகளை யாராவது பறிக்க நினைத்தாலோ, எதிர்த்தாலோ சொந்த விருப்புவெறுப்பின்றி அவர்களை எதிர்த்து நிற்க வேண்டும்.

எனவே, பாஜகவையும், மிஸ்டர் அண்ணாமலையையும் நம் வன்னிய மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று உங்கள் மாவீரன் காடுவெட்டி குருவின் மகளாக கேட்டுக்கொள்கிறேன் என விருதாம்பிகை மிக ஆவேசமாக கூறியுள்ளார்.

Related posts