அரசியல்இந்தியா

காங்கிரஸ் கட்சியை சரிவிலிருந்து மீட்குமா பிரசாந்த் கிஷோரின் புதிய வியூகம்!?

தோல்வியைத்தழுவி வரும் காங்கிரஸ்

இந்தியாவில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. நாட்டில் பாஜக அல்லாத முதல்வர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

காங்கிரஸ் கட்சி நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பெரும்பாலான இடங்களில் தோல்வியை தழுவி வலுவிழந்து வருகிறது. இந்நிலை தொடர்ந்தால், காங்கிரஸ் கட்சி நாட்டு மக்களிடம் செல்வாக்கை இழந்துவிடும்.  இதனால், 2024 இல் நடக்க உள்ள மக்களவை தேர்தலில் தங்களது பலத்தை மீட்டெடுக்கும் பொருட்டு ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது.

பிரசாந்த் கிஷோரின் வியூகம்

இந்நிலையில், பிரபல அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் டெல்லியில் உள்ள சோனியா காந்தி வீட்டில் காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் பேசி வருகிறார். அக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியை எவ்வாறு சீரமைக்கலாம் என்றும், 2024 இல் நடக்க இருக்கும் மக்களவை தேர்தலை எவ்வாறு சந்திக்கலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.இந்த வாரத்தில் மட்டும் பிரசாந்த் கிஷோர் நான்கு முறை காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்திதொடர்பாளர் சுர்ஜோவாலா,

பழைமையான காங்கிரஸ் கட்சியை மீட்க பிரசாந்த் கிஷோர் பல திட்டங்களை வகுத்துள்ளார் என்றும், காங்கிரஸ் கட்சியின் அடுத்தக் கட்ட நடவடிக்கையை சோனியா காந்தி விரைவில் வெளியிடுவார் என்றும் கூறியுள்ளார். இதற்கிடையே, பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts