விருதுநகரில் ஆட்டோவில் தவறவிட்ட 25 சவரன் நகையை உரிமையாளரிடம் ஒப்படைத்த நேர்மையான ஆட்டோ ஓட்டுனரை நேரில் அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினர்.
விருதுநகர் மாவட்டம்
நேர்மைக்கு என்ற சான்று இந்த உலகத்தில் ஏதோ ஒரு முலையில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படிப்பட்ட நேர்மை சில நேரத்தில் கண்ணீரும் கவலையுமாக உள்ள மக்களை ஆச்சரியப்படுத்தி மகிழிச்சி ஆழ்த்துவது இயல்பு. விருதுநகர் பெரிய வள்ளிக்குளத்தை சேர்ந்தவர் கருப்பசாமி மனைவி முத்துலட்சுமி தம்பதியினர். இவர்களது மகளுக்கு விருதுநகர் ராமர் கோவிலில் இன்று காலை திருமணம் நடந்தது. மற்ற சுபநிகழ்ச்சிகள் அனைத்தும் விருதுநகர் கந்தசாமி ராஜம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
திருமண நிகழ்ச்சி
இந்நிலையில், பெண்ணின் பெற்றோர் விருதுநகர் ராமர் கோவிலில் இருந்து மண்டபத்திற்குச் செல்ல அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி உள்ளனர். ஆட்டோ ஓட்டுநர் ராமர் அவர்களை திருமண மண்டபத்தில் இறக்கி விட்டுவிட்டு ஆர்.எஸ்.ஆர்.நகரில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று விட்டார்.
ஆட்டோ ஓட்டுநர் ராமர்
பின்னர் ஒரு மணி நேரம் கழித்து சவாரிக்காக வீட்டில் இருந்து ஆட்டோ ஓட்டுநர் ராமர் புறப்பட்டுள்ளார். அப்போது ஆட்டோவின் பின் சீட்டில் பேக் ஓன்று இருந்ததை கண்ட அவர் பேக்கை திறந்து பார்த்துள்ளார். அப்போது அதில் தங்கநகைகள் இருப்பது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர் ராமர் திருமண மண்டபத்திற்கு சென்றுள்ளார். அங்கு கண்ணீரும் கவலையுமாக இருந்த மணப்பெண்ணின் பெற்றோர் பார்த்துள்ளார். அப்போது அங்கு விசாரணையில் இருந்த கிழக்கு காவல் நிலைய போலீசாரின் முன்னிலையில் தங்கநகைகள் இருந்த பேக்கை ஒப்படைத்தார்.
காவல் கண்காணிப்பாளர் எஸ். பி மனோகர்
இதனை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். பி மனோகர் ஆட்டோ ஓட்டுநர் ராமரை நேரில் அழைத்து பாராட்டினார். பாராட்டியது மட்டுமல்லாமல் பாராட்டியதற்கான சான்றிதழையும் வழங்கினார்.