இந்தியாதமிழ்நாடு

இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் : மீனவர்கள் வேலைநிறுத்தம்!

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி புதுக்கோட்டை விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துமீறல்

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகங்களில் சுமார் 550 விசைப்படகுகள் இருக்கிறது. இதன் மூலம் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இந்நிலையில், கடந்த 28-ந்தேதி சர்வதேச எல்லை அருகே இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 24 பேரை விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். இது மீனவர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனைத்தொடர்ந்து மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

இதனிடையே இலங்கை கடற்படையினரின் அத்துமீறலை கண்டித்து புதுக்கோட்டை மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கடற்கரையில் சுமார் 150-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related posts